PN உடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிப்பேன்- ஜாஹிட்

கோலாலம்பூர்: கடந்த மூன்று மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு, பெரிக்காத்தான் நேஷனலுடன் தனது அரசியல் ஒத்துழைப்பை நீட்டிக்க பாரிசான் நேஷனல் ஒருபோதும் விரும்பவில்லை என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி  தெரிவித்துள்ளார்.இருப்பினும்,  “தேவைப்பட்டால்” அடுத்த பொதுத் தேர்தலில் இந்த ஒத்துழைப்பைத் தொடர்வது குறித்து பரிசீலிப்பதாக பாரிசான் தலைவர் கூறினார்.

குறிப்பாக நெகிரி செம்பிலான், மலாக்காவில் நாம் கடந்து வந்திருப்பது ‘தஃபாஹும் சியாசி’ என்பதாகும், இதன் பொருள் ஒரு அரசியல் புரிதல். “இருப்பினும், நேரம் வரும்போதும் சூழ்நிலைகள் தேவைப்படும்போதும், இந்த விஷயம் குறித்து விவாதிக்க நாம் ஒன்றாக அமர்வோம் என்று நேற்று பிரிக்ஃபீல்ட்ஸில் மலேசிய மக்கள் முன்னேற்றக் கட்சியால் (PPP) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு  ஜாஹிட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் மற்றும் பெரிகாத்தான் இடையேயான அரசியல் ஒத்துழைப்பு முறைப்படுத்தப்படுமா என்பது குறித்த கேள்விகளுக்கு துணைப் பிரதமர் பதிலளித்தார். நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தான் வலியுறுத்தப் போவதில்லை என்றும், அந்த முடிவைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் விட்டுவிடுவதாகவும் அமாட்  ஜாஹிட் கூறினார். நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவ்வாறு செய்வதற்குப் பிரதமருக்கு உரிமையும் அதிகாரமும் உண்டு என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here