ஒருதலைக் காதல்
அவரது பாலோயர்கள் அவருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இதனிடையே நேஹாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வந்த இளைஞர் அபினவ், அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் காசிபூரை சேர்ந்த அபினவ், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
ரகளை
இந்நிலையில், கடந்த 7-ந்தேதி டெல்லியில் உள்ள நேஹாவின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற அபினவ், அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். நேஹாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி அவர் கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நேஹாவின் உறவினர்கள், அபினவ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனிடையே போலீசார் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வரும்போது அபினவ் பலத்த காயமடைந்த நிலையில் இருந்தார். அவரை மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபினவ், கடந்த 15-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
கொலை வழக்கு
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நேஹாவின் தந்தை மற்றும் உறவினர் ஒருவரை கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் நேஹா மீது அபினவ் ஒருதலைக் காதல் கொண்டிருந்தார் என்றும், அதே சமயம் நேஹாவுக்கு அபினவ் பற்றி எதுவும் தெரியாது என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













