புத்ராஜெயா அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ சம்பவம்

கோலாலம்பூர் :

புத்ராஜெயா பிரிசின்ட் 11-இல் உள்ள ‘புத்ரா டாமாய்’ (Putra Damai) அடுக்குமாடிக் குடியிருப்பின் 11-ஆவது மாடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், அவ்வீடு சுமார் 90 விழுக்காடு எரிந்து நாசமானது.

புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் முகமட் ஹசிக் ஹஸ்மி கூறுகையில், இன்று காலை 7.36 மணியளவில் இத்தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, பிரிசின்ட் 7 மற்றும் பிரிசின்ட் 14 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 21 வீரர்கள் மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் காலை 7.41 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காலை 8.13 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆரம்பகட்ட ஆய்வில், 11-ஆவது மாடியிலுள்ள அவ்வீட்டின் படுக்கையறையில் தீப்பற்றியது தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் வீடு சுமார் 90 விழுக்காடு சேதமடைந்த போதிலும், நல்வாய்ப்பாக எவருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.

தீ விபத்திற்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here