மோட்டார் சைக்கிள் சறுக்கி கார்கள் மீது மோதியதில் மாணவர் ஒருவர் பலி

பட்டர் வொர்த், இன்று அதிகாலை சுங்கை துவாவை நோக்கி பட்டர்வொர்த் வெளிவட்ட சாலையின் (எல்.எல்.பி) கிலோமீட்டர் 11.9 இல்  ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஃபார்ம் 4 மாணவர் உயிரிழந்தார். அதிகாலை 2.35 மணியளவில் நடந்த விபத்தில், தலையில் பலத்த காயம் அடைந்த 16 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செபராங் பெராய் உத்தாரா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ரட்ஸி அகமது தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், இடதுபுறப் பாதையிலிருந்து வலப்புறமாக திசை மாறியபோது, ​​கார் ஒன்றின் மீது உராய்ந்ததில் விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இச்சம்பவத்தால் வாலிபர் சாலையில் விழுந்து விட்டார். பின்னால் வந்த இரண்டு கார்களால் மோதப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செபராங் ஜெயாவில் உள்ள பள்ளியில் படித்த வாலிபரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவரது தந்தைக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார். பாதிக்கப்பட்டவரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு (HSJ) அனுப்பப்பட்டு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here