பேராக், தைப்பிங்கிலுள்ள புக்கிட் லாரூட் சுற்றுலாப் பகுதியில், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பெய்த கனமழையைத் தொடர்ந்து நிகழ்ந்த நிலச்சரிவினால் அது முழுமையாக மூடப்பட்டது.
அந்த நிலச்சரிவினால், அப்பகுதிக்கு செல்லும் பிரதான சாலையின் 10-வது கிலோமீட்டரில் மரம் ஒன்றும் விழுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக அதன் நிர்வாகத் தரப்பு தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
அங்கு நிகழ்ந்திருக்கும் நிலச்சரிவினால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், அச்சுற்றுலாப் பகுதியில் எந்தவொரு சுற்றுலா நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது அப்பகுதி முழுமையாக மூடப்படுவதாக அந்த முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதியில் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்த பின்னர், பொதுப்பணித் துறை அது மூடப்பட்டிருக்கும் கால அவகாசம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் நிர்வாகத் தரப்பு கூறியது.















