மார்ச் 16 வரை மழை குறைவாக பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

தீபகற்ப மலேசியாவில் மார்ச் 16 வரை மழை குறைவாக பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக தீபகற்பத்தின் வட மாநிலங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வானிலை ஆய்வு மையத்தின் பணிப்பாளர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா கூறினார்.

எவ்வாறாயினும், நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை இன்னும் பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“தீபகற்பம், சபா மற்றும் சரவாக்கின் பல பகுதிகள் மற்றும் மேற்குப் பகுதிகளில் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை இன்னும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here