மலாக்காவில் புதிய முதல்வராக அப்துல் ரவூப் பதவியேற்றார்

தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ 13ஆவது மலாக்கா முதலமைச்சராக வெள்ளிக்கிழமை (மார்ச் 31) பதவியேற்றார்.

மாநில ஆளுநர் துன் டாக்டர் முகமட் அலி ருஸ்தமின் அலுவலகத்தில் ஆயர் கெரோவில் உள்ள அலுவலகத்தில் மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

விழாவில் முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி, மலாக்கா மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here