கிழக்கு கடற்கரை மாவட்டமான தாவாவிலுள்ள சபா குடிநுழைவுத் துறை முகாமில், பல்வேறு குடியேற்றக் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 182 இந்தோனேசியர்கள், அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
நாடுகடத்தப்பட்டவர்களில் 145 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் அடங்குவர் என்று சபா குடிநுழைவுத் துறை இயக்குநர், டத்தோ ஷரீபா சித்தி சாலேஹா ஹபீப் யூசாஃப் தெரிவித்தார்.















