விளக்கு கம்பத்தில் மோதி 18 வயது இளைஞன் மரணம்

லாபுவான்: Jalan Pohon Batu, Kg Lajau என்ற இடத்தில் இன்று அதிகாலையில்  மோட்டார் சைக்கிள் சறுக்கி விளக்கு கம்பத்தில் மோதியதில் 18 வயது சிறுவன் உயிரிழந்தான். முகமட் ருஹைஃபான் மஹதி என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் அதிகாலை 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக லாபுவான் போலீஸ் தலைவர் ஹமிசி ஹலீம் தெரிவித்தார்.

இறந்தவர் நகர மையத்தில் இருந்து Pohon Batu நோக்கி பயணித்த போது, தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக போலீசார் நம்புகின்றனர். முகமட் ருஹைஃபான் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் உடனடியாக போலீசாருக்கு  தகவல் அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் காலை 8.35 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் 087-412 313 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணையை எளிதாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here