சிப்பாங்கிலுள்ள நகைக் கடையில் கொள்ளை; மூவருக்கு போலீஸ் வலைவீச்சு

புத்ராஜெயா:

கோத்தா வாரிசான், சிப்பாங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள தங்க நகைக் கடையில் நேற்றிரவு மூன்று பேர் ஏராளமான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் தலைக்கவசம் மற்றும் நீண்ட கை ஜாக்கெட் அணிந்து வளாகத்திற்குள் நுழைந்து, கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த சம்பவத்தை அங்கிருந்த மக்கள் வீடியோவாக பதிவு செய்ததால், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.

Eirul NeiRule Akmar என்று அழைக்கப்படும் சமூக ஊடக பயனர்களில் ஒருவர், தான் சம்பவத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், காவல்துறையையும் தொடர்பு கொண்டார் என்று கூறினார்.

மற்றொரு சமூக ஊடக பயனர் H R Marhaen கூறுகையில், கொள்ளை சம்பவத்தில் பொதுமக்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பதைத் தெரிவித்ததுடன், தனது நன்றியைத் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் இரவு 8.15 மணியளவில் நடந்ததாகவும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இது தொடர்பில் காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பின்னர் வெளியிடும் என்று சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here