சுங்கை பக்காப் இடைத்தேர்தல் முடிவினை ஒற்றுமை அரசாங்கம் மதித்து ஏற்று கொள்கிறது: பிரதமர்

கோலாலம்பூர்: சுங்கை பக்காப் மாநில இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் தோல்வியை ஒற்றுமை அரசு மதித்து ஏற்றுக்கொள்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மடானி அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதலின் கீழ் தீவிரமாக சில மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவர் தனது முகநூல் பதிவில், மடானி அரசாங்கம், மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தவும் தேசத்தின் கண்ணியம், அந்தஸ்தை உயர்த்துவதற்கான நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக செயல்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட உறுதியுடன் இந்த முடிவை ஒப்புக்கொள்கிறது. உறுதியான அடித்தளம் மற்றும் அர்ப்பணிப்புடன் ஒற்றுமை அரசாங்கம், நாட்டின் யதார்த்தங்கள் மற்றும் தற்போதைய புதிய மாற்றங்களுடன் ஒத்துப்போகும் கொள்கைகளின் முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நேற்று, பெரிக்காத்தான் நேஷனல் அதன் வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜோஹாரி அரிஃபினை விட 4,267 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதை அடுத்து சுங்கை பக்காப் மாநிலத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது. நிபோங் தெபால் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்தீஃப் மே 24 அன்று வயிற்று அழற்சியால் இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here