லஜாக் சைக்கிள் பந்தயத்தில் பதின்ம வயதினர்; போலீஸ் களமிறங்கியது

அலோர் ஸ்டார்:

அலோர் ஸ்டார், ஜாலான் தெலுக் வானா பாலத்தில் பதின்ம வயதினர் லஜாக் சைக்கிள் ‘basikal lajak’ பந்தயத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவத்தை கெடா மாநில போலீஸ் புலன் விசாரணை செய்ய தொடங்கி இருக்கிறது.

இதன் தொடர்பான வீடியோ வைரலாகி வருவதை தொடர்ந்து போலீஸ் களமிறங்கி இருப்பதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சித்தி நோர் சலாவத்தி சாஹாட் கூறினார்.

இந்த பந்தயத்தை காட்டும் சுமார் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வைரல் வீடியோ குறித்து பொது மக்களிடமிருந்து நேற்று காலை 9.24 மணியளவில் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பந்தயம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்திருக்கிறது. 8 பதின்ம வயதினர் லஜாக் சைக்கிள் (திருத்தி அமைக்கப்பட்டது) பந்தயத்தில் ஈடுபட்டனர்.

மற்ற சாலைப் பயனீட்டாளர்கள் பற்றி சிறிதும் நினைத்துப் பார்க்காமல் மிகவும் அபாயகரமாக இவர்கள் பந்தயத்தில் ஓடியிருக்கின்றனர் என்று சித்தி நோர் சலாவாத்தி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here