குளோபல் இக்வான்: 96 வங்கி கணக்குகள் முடக்கம்; 8 வாகனங்கள் பறிமுதல் – ஐஜிபி

கோலாலம்பூர்:

குளோபல் இக்வான் சர்வீசஸ், பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மொத்தம் 96 வங்கி கணக்குகள், அவற்றில் உள்ள 5 லட்சத்து 81 ஆயிரத்து 552 ரிங்கிட் 31 சென் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கிறது என்று ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் இன்று கூறினார்.

அதே சமயம் அந்நிறுவனத்திற்கு சொந்தமான எட்டு வாகனங்களையும் போலீஸ் பறிமுதல் செய்திருப்பதாக அவர் சொன்னார்.

இது தவிர அந்நிறுவனத்தின் நான்கு வங்கி கணக்குகள் மூடப்பட்டன என்றும் குறிப்பிட்ட அவர், கள்ளப் பண பரிவர்த்தனை, 2001 பயங்கரவாத தடுப்பு நிதியளிப்பு, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் வழி சம்பாதிக்கப்பட்ட நிதி சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

அந்நிறுவனத்திற்கு சொந்தமான தொண்டு இல்லங்களில் சிறார் துன்புறுத்தல் தொடர்பாக போலீஸ் மேற்கொண்டிருக்கும் புலன்விசாரணையின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று ரஸாருடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here