கோலாலம்பூர்:
அரச மலேசிய சுங்க இலாகா 2024 ஆகஸ்டு மாதம் வரை மொத்தம் 41.68 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை பதிவு செய்திருக்கிறது.
2023 இதே காலக் கட்டத்தில் அதன் வசூலிக்கப்பட்ட மொத்த வருமானம் 36.13 பில்லியன் ரிங்கிட் என்று மலேசிய சுங்க இலாகா தலைமை இயக்குனர் டத்தோ அனிஸ் ரிஸானா முகமட் ஸைனுடின் கூறினார்.
மிகச் சரியான பாதை, வியூகங்கள் இந்த மகத்தான சாதனைக்கு வித்திட்டிருக்கிறது என்று பெர்னாமா டிவி நடத்திய ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் இலக்கு 56 பில்லியன் ரிங்கிட் ஆகும். ஆண்டு இறுதிக்குள் இதனை சாதிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.









