வயநாடு இடைத்தேர்தல்- மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி

கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைத்தேர்தல் நடந்தது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களமிறகினார்.முதல் முறையாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்துள்ள அவர் வெற்றிக்கனியை பறிப்பாரா ? என்று நாடு முழுவதும் எதிர்பார்த்த நிலையில், மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்தார்.அவர் காலை 9.45 மணி நிலவரப்படி 51,930 வாக்குகளை பெற்றார். அதன்பின்பு பெருவாரியான வாக்குகளை வெற்றியின் விளம்பில் பிரியங்கா காந்தி இருந்து வந்தார்.

இறுதியில், பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகளை பிரியங்கா காந்தி பெற்றுளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்யன் மோகேரி 2,11,407 வாக்குகளும், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.சிபிஐ வேட்பாளர் சத்யன் மொகேரி 2வது இடம், பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் டெபாசிட் இழந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here