13 வயது சிறுமி சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக புகார்

காஜாங்: சனிக்கிழமை (டிச. 21) முதல் 13 வயது சிறுமி காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர்   Naazron Abdul Yusof செவ்வாயன்று (டிசம்பர் 24) ஒரு அறிக்கையில், Nur Aleeyah Qistina Mohammad Adzham கடைசியாக பண்டார்  பாரு பாங்கியில் உள்ள அபார்ட்மெண்ட் பாங்கி இடமானில் காணப்பட்டார் என்று கூறினார்.

அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது காஜாங் காவல்துறையையோ 03-89114222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது விசாரணை அதிகாரி சர்ஜன் முகமது கைருல் ஹபீஸ் அப்துல் கனியை 018-4027665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here