MRSM கல்லூரியைச் செர்ந்த 16 மாணவர்களுக்கு உணவு நச்சால் பாதிப்பு

ஜொகூர் பாருவில் உள்ள எம்ஆர்எஸ்எம் (MRSM) கல்லூரியைச் செர்ந்த குறைந்தது 16 மாணவர்களுக்கு உணவு நச்சால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பொன்ற அறிகுறிகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் இருந்து இந்த சம்பவம் குறித்த தகவலை பெற்றதாக மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மொத்தம் 16 மாணவர்கள் பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஜொகூர் பாரு மாவட்ட சுகாதார அலுவலகத்தின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு, விசாரணை மேற்கொள்வதற்காக எம்ஆர்எஸ்எம் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here