வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியானது ‘ரெட்ரோ’ திரைப்படம். இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனை தொடர்ந்து அவர் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். வெற்றிமாறனை பொறுத்தவரை அவர், ‘விடுதலை 2’ படத்தை இயக்கி முடித்தார். அடுத்து அவர் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.

இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக தொடங்கப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here