முன்னாள் பிரபல பிரான்ஸ் கால்பந்து வீரரான பெர்னார்ட் லாகோம்பே காலமானார். பிரான்ஸ் கால்பந்து துறையில் மிக முக்கியமான பெயர்களில் ஒருவராக பெர்னார்ட் லாகோம்பே திகழ்ந்து வந்தார். இவர் இவ்வாண்டு ஜனவரி முதல் பல மாதங்கள் மருத்துவமனையில் கழித்த பின்னர், தனது 72 வயதில் காலமானார்.
அவரின் மரன செய்தி செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த துயர சம்பவம் ஒலிம்பிக் லயோன் ரசிகர்களை மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் முழு விளையாட்டு சமூகத்தையும் அதிர்ச்சிக்கும் துயரத்திற்க்கும் உள்ளாக்கியுள்ளது.
ஐந்து சாப்தங்களுக்கும் மேலாக பிரான்ஸ் கால்பந்து வரலாற்றில் லாகோம்பே ஒரு கால்பந்து வீரராக, பயிற்சியாளராக, நிர்வாகியாக, ஆலோசகராக என பல பதவிககளில் இருந்தார்.








