இரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 19 வயது சிறுவன் பலி

சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில்  இன்று காலை கி.மீ.23.6 இல், முந்திச் செல்ல முயன்ற மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பதின்ம வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். காலை 7.45 மணிக்கு 19 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 32 வயது ஓட்டுநரை முந்தி சென்ற விபத்துக்குள்ள இந்த சம்பவம் நடந்ததாக போர்ட்டிக்சன் காவல்துறைத் தலைவர் மஸ்லான் உடின் தெரிவித்தார்.

இரு ஓட்டுநர்களும்  சிரம்பானில் இருந்து போர்ட்டிக்சனுக்குச் சென்று கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அதே நேரத்தில் மற்றொருவருக்கு முழங்கால், கையில் காயம் ஏற்பட்டது என்று பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது. அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் மரணம் ஏற்பட்டதாக வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here