கோத்தா பாரு,
Gua Musang- Kuala Betis சாலையில் இன்று நடந்த பயங்கர விபத்தில், ஒரு டிரெய்லர் லோரி 20 மீட்டர் ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. எனினும், டிரைவர் அதிசயமாக தப்பியுள்ளார்.
விபத்தில் சிக்கியவர் 32 வயதான வான் முகமட் இற்வான் வான் நூர் அஹ்மத் என்பவராகும். இவர் Gua Musang பகுதியைச் சேர்ந்தவர் என்று Gua Musang தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையத்தின் தலைவர் நோர் அசீசி சே நோ தெரிவித்துள்ளார்.
பொருட்களை எடுத்துச் செல்லும் பொருட்டு, Gua Musangஇல் இருந்து Kuala Betis நோக்கி சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லோரி எதிர்புற பாதையில் சென்று பள்ளத்தாக்கில் விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குப் பிறகு, அந்த வழியால் சென்ற பொதுமக்கள் அந்த நபரிடம் தொடர்பு கொள்ள முடியாததால் தீயணைப்பு துறையினரை அழைத்ததாகவும், அவர் அதிர்ச்சியில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















