தெரு நாய்களுக்கு உணவளிக்கும் வகையில் தன் மகளுக்கு மனித நேய உணர்வினை கற்றுக் கொடுத்த பெற்றோர்

டணிஸ்தா சுரேஸ்,

தற்பொழுது ஜஷ்மின் என்ற மலாய் இனத்து பெண், தனது மகளுக்கு தெரு நாய்களுக்கு உணவளிப்பதன் மூலம் மனித நேய உணர்வினை கற்றுக் கொடுத்துவரும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

நான்,எனது கணவர் மற்றும் என் மகள் மூவருக்கும் மிருகங்களுக்கு உணவளிப்பது ஒரு பொழுது போக்காக அமைவதோடு, என் மகளுக்கு உயிர்களின் மீதான இறக்கம், கருணை மற்றும் ஜீவ காருண்யத்தைக் கற்றுக் கொடுக்க அது பெரும் உதவியாக அமைகிறது என அவர் கூறினார்.M’sian family feeds stray dogs with daughter

மேலும், என் பெற்றோர் எனக்கு கற்றுக்கொடுத்த இந்த நல்ல செயல்களை நான் இன்று என் மகளுக்கு கற்றுத்தருகின்றேன் என அவர் கூறுவது பார்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்கிறது. அவரது பெற்றோரின் சிறப்பான வளர்ப்பு முறையை அனைவராலும் உணரமுடிகின்றது.

எல்லா உயிரினங்களும் ஆபத்தானவைகள் அல்ல, நாம் அவற்றின் மீது அன்பு செலுத்துவது மிகவும் அவசியமானது என அவர் கூறினார். ஜஷ்மின் போன்ற நல்ல மனிதர்கள் இவ்வுலகில் இன்னும் வாழ்கின்றனர் என்பது ஆத்மதிருப்தியை அளிப்பதுடன் இவ்வாறான மனிதர்களின் உள்ளம் கண்களை கருணை கடலால் நிரப்புகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here