படிவம் 1 மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணத்தில் ஏதேனும் குற்றவியல் கூறுகள் இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பதற்கான விசாரணை செப்டம்பர் 3 ஆம் தேதி கோத்த கினபாலு மரண விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கும். இன்று வழக்கு குறிப்பிடும் போது, மரண விசாரணை அதிகாரியாகச் செயல்படும் சபா மாநில நீதிமன்ற இயக்குநர் அஸ்ரீனா அஜீஸ் தேதிகளை நிர்ணயித்ததாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.
விசாரணை நடவடிக்கைகள் செப்டம்பர் 3-4, 8-12, 17-19, 22-30 ஆகிய தேதிகளில் நடைபெறும். சபா மாநில வழக்கு விசாரணை இயக்குநர் கோரிய விசாரணைக்கு மொத்தம் 195 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி, ஜாராவின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள், ஏதேனும் குற்றவியல் கூறுகள் இருக்கிறதா என்பது உட்பட, விசாரணை நடத்தப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் தெரிவித்தன.
ஜூலை 16 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் சபாவின் பாப்பரில் உள்ள தனது பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், ஜாரா மயக்கமடைந்து காணப்பட்டார். மறுநாள் அவர் குயின் எலிசபெத் I மருத்துவமனையில் இறந்தார். கொடுமைப்படுத்துதல் இருந்திருக்கலாகம் என்ற சந்தேகத்திற்கு மத்தியில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது.







