பிரேசிலியா,தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்தார்.ஆனால் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க போல்சனாரோ மறுத்து ஆதரவாளர்களை திரட்டி போராட்டம் நடத்தினார்.
இதற்கிடையே அவர் மீது தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி, புதிய ஆட்சியை கவிழ்க்க சதி உள்படபல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் போல்சனாரோவை வீட்டுக்காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த நிலையில் போல்சனாரோ அர்ஜென்டினாவுக்கு தப்பி செல்ல முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல் சுப்ரீம் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் போல்சனாரோவின் தொலைபேசி உரையாடலில் அவர் அர்ஜென்டினாவுக்கு தப்பிச் சென்று அரசியல் தஞ்சம் கோர விரும்புவதாகக் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.









