செபராங் ஜெயா,
இங்குள்ள எம்.எஸ்.எம் பிறை சீனி உற்பத்தி தொழிற்சாலை நில அடகு குறித்த மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டம் அமைச்சரவையில் பரிசீலனை செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
அந்த நில அடகு கால அவகாசம் கடந்த ஆண்டே நிறைவு பெற்று விட்டது.
அதே சமாயம் அந்த நிலம் உட்பட கம்போங் மானிஸ் பகுதியை மறுகட்டமைப்பு செய்வதற்கு எங்கள் தரப்பு ஏற்கெனவே அறிவிப்பு செய்திருந்தது.
இருப்பினும் இந்த தொழிற்சாலை உடனடியாக இட மாற கேட்டுக் கொள்ளப்படாது.
மறுசீரமைப்பு பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படுவதால் இடம் மாற இத்தொழிற்சாலை தரப்பினருக்கு நாம் குறைந்தது 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்குவோம்.
இதற்கு பல தரப்பினரை உட்படுத்திய பேச்சு வார்த்தையும் அவசியமாகிறது. எனவே இவ்விவகாரத்தில் தொழிற்சாலை நிர்வாக தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவர் என நம்புகிறோம்.
ஒரு வேளை அவர்கள் இடம் மாறா விட்டால் இப்பகுதியை மேம்படுத்த முடியாது எனவும் அந்தோனி லோக் தெளிவுப்படுத்தினார்.









