குவா முசாங்-ஜெலவாங்கில் உள்ள D29 பாதை சரிவின் காரணமாக மூடப்பட்டது

குவா முசாங்: குவா முசாங்-ஜெலவாங் பாதையில் KM11.95 இல் உள்ள D29 வழித்தடத்தில் சாலை சரிவு ஏற்பட்டதால்,  அச்சாலை மூடப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய இந்த மூடல், மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்று குவா முசாங் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டுநர்கள் FT08 ஜாலான் குவா முசாங்-கோத்த பாரு சாலை, FT66 ஜாலான் கம்போங் சுங்கை சாம்-ஜெலி சாலை, சுங்கை அசாப்-பெர்டம்-மெராண்டோவுக்கான FT2743 அணுகல் சாலை உள்ளிட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்பு கொண்டபோது, ​​குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ சாலை சரிவை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here