ஈரானை தாக்கியவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம்: மொஜ்தபா கமெனி திட்டவட்டம்

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட எனது தந்தை அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற தியாகிகளின் மரணங்களுக்கு பழி வாங்குவோம். ஈரானை தாக்கியவர்களை நிச்சயம் தண்டிப்போம்.

குற்றமிழைத்த ஆக்கிரமிப்பாளர்கள் தப்பிச் செல்ல ஈரான் அனுமதிக்காது. இப்போரில் ஏற்பட்ட ஒவ்வொரு காயத்திற்கும் இழப்பீடும், தியாகிகளுக்கு ரத்தப்பணமும், மாற்றுத் திறனாளிகளான முன்னாள் படைவீரர்களுக்கு மறுவாழ்வு நஷ்டஈட்டையும் நாங்கள் நிச்சயமாகக் கோருவோம்.

ஹோர்முஸ் ஜலசந்தியின் நிர்வாகத்தை ஒரு புதிய கட்டத்திற்கு நாங்கள் நிச்சயமாக முன்னெடுத்துச் செல்வோம். அந்த ஜலசந்தியை நிர்வகிப்பதில் ஈரான் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. ஈரான் போரை விரும்பவில்லை என்றாலும் தனது உரிமைகளை ஒரு போதும் விட்டுக்கொடுக்காது. இந்த போரில் ஈரான் திட்டவட்டமாக வெற்றியாளராக திகழ்கிறது. தற்காலிக சண்டை நிறுத்தம் என்பது போரின் முடிவு அல்ல. அனைத்து ராணுவப் பிரிவுகளும் உச்சத் தலைவரின் கட்டளையைப் பின்பற்றி தங்கள் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி வைத்துள்ளன.

எங்கள் கைகள் இப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளன. எதிரி தரப்பிலிருந்து மிகச்சிறிய தவறு நேர்ந்தாலும் அது முழுப் பலத்துடன் முறியடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here