3-வது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்

சென்னை, அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அமைச்சர் சரத்குமார் அறிவித்தார்.

தமிழக அரசு பெண் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில், மிக முக்கியமான மற்றும் முற்போக்கான அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு வெளியிட்டுள்ளது. அரசுப் பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் இனி 365 நாட்கள் (ஓராண்டு) முழுமையான மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு ஆகும் இது அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுளது. இதற்கு முன் 2 குழந்தைகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதிலளித்துப் பேசியதாவது:

AM, PM என நேரம் பார்க்காமல் வேலை பார்க்கும் முதல்-அமைச்சரே நாளைய பாரதத்தின் PM நீங்கள் தான். தற்போதைய விடுப்பு முறையை 12 வாரங்களில் இருந்து அப்படியே நீட்டித்து, முதல் இரு குழந்தைகளைப் போலவே மூன்றாவது குழந்தைக்கும் முழுமையாக 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்காக வெற்றி பாதை செயலி உருவாக்கப்படும்.

அரசு பணியிடங்களை நிரப்ப தனி செயலி உருவாக்கப்படும். டிஎன்பிஎஸ்சி கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும் என்றார்.

மூன்றாவது குழந்தையின் போதான பிரசவ வலியும், பராமரிப்புத் தேவையும் மற்ற பிரசவங்களைப் போன்றதே என்பதால், இந்தச் சலுகை மறுக்கப்படக் கூடாது என்று அண்மைக் காலங்களில் சென்னை ஐகோர்ட்டும் சில முக்கிய வழக்குகளில் சுட்டிக்காட்டியிருந்தது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும், பெண் ஊழியர்களின் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவிற்கு அரசு ஊழியர் சங்கங்களும், பெண் பணியாளர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here