9 நாட்கள் தீவிர விரதம் இருந்த பெண்… சடங்குகள் முடிந்த மறுநாளே உயிரிழந்த சோகம்…

சுபால், 9 நாட்கள் தீவிர விரதம் இருந்த பெண் சடங்குகள் முடிந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள திரிவேணிகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சசிதா தேவி (வயது 35). இவர் நவராத்திரி விழாவையொட்டி, பாடி துர்கா தேவி கோவில் வளாகத்தில், 9 நாட்கள் மார்பில் புனித மண் கலசத்தை வைத்து படுத்தபடி துர்காதேவியை வழிபட்டார். 9 நாட்களும் தண்ணீர் மற்றும் உணவு உண்ணாமல் விரதம் இருந்துள்ளார்.

நவராத்திரி சடங்குகளை முடித்துக்கொண்டு கடந்த (செவ்வாய்க்கிழமை) வீடு திரும்பினார். அன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது. மறுநாள் (புதன்கிழமை) நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அவரை உடனடியாக திரிவேணிகஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தீவிர விரதத்தால் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மாரடைப்பு காரணமாக சசிதா தேவி உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே, உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். விரதம் இருந்த பெண், சடங்குகள் முடிந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here