‘தண்ணீர் கலந்த’ RON95 பெட்ரோல் – சுங்கை பூலோ பெட்ரோல் நிலையம் மீது விசாரணை

இந்த மாத தொடக்கத்தில், தண்ணீர் கலந்த RON95 பெட்ரோலை விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சுங்கை பூலோவில் உள்ள பத்து 14இல் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் நிலையம் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 19 அன்று ஒரு புகார் வந்ததாகவும், அதே நாளில் சோதனை நடத்துவதற்காக அதிகாரிகளை அந்த பெட்ரோல் நிலையத்திற்கு அனுப்பியதாகவும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் சிலாங்கூர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் பம்புகளில் இருந்து மூன்று மாதிரிகள் எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்வதற்காக வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டதாக அதன் இயக்குநர் ஹனிஃப் அஸாரி கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக ஒரு விசாரணை அறிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அமைச்சகம் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது  என்று அவர் கூறினார்.

பம்பில் விற்கப்படும் எரிபொருளின் தரத்தை உறுதி செய்யுமாறு அந்த பெட்ரோல் நிலையத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் ஹனிஃப் கூறினார். மாநிலத்தில் உள்ள ஏழு பெட்ரோல் நிலையங்களில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்கப்படுவதாகக் கூறப்படும் 10 புகார்களை அமைச்சகத்தின் சிலாங்கூர் அலுவலகம் இதற்கு முன்னர் பெற்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here