இஸ்ரேல் – துருக்கி இடையே மூளும் புதிய மோதல்: மலேசியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

காஸா விவகாரத்தில் கவனம் செலுத்தும் அதேவேளையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே அதிகரித்து வரும் புதிய மூலோபாய மோதல்களையும் மலேசியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றன.

சிரியாவின் இட்லிப் பகுதியில் உள்ள அபு அல்-துஹுர் விமானப்படை தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்கள் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

சிரியாவில் துருக்கியப் படைகள் குவிக்கப்படுவதைத் தடுப்பதே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று இஸ்ரேல் தரப்பு வாதிட்டாலும், துருக்கியின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான இந்தச் செயலைத் துருக்கி கடுமையாகக் கண்டித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் துருக்கியும், அதிநவீன ராணுவத் தளவாடங்களைக் கொண்டுள்ள இஸ்ரேலும் மோதிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மத்திய கிழக்கில் புதிய பாதுகாப்புச் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

பாலஸ்தீன ஆதரவுக் கொள்கையில் உறுதியாக இருக்கும் அதேவேளையில், சிரியாவின் இறையாண்மை மற்றும் துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த வளர்ந்து வரும் பூசல்களை மலேசியா தூதரக ரீதியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், பல துருவங்களைக் கொண்ட இந்த விவகாரத்தில் அமைதியைப் பேண அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here