எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு பழுது ஏற்படாது; மத்திய மந்திரி சுரேஷ் கோபி…

திருச்சூர், மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி திருச்சூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- எத்தனால் 20 சதவீதம் கலந்த பெட்ரோலை பயன்ப டுத்துவது மூலம் வாகனங்கள் பழுதடைவதாகவும், எத்தனால் அளவு 20 சதவீதத்தை விட அதிகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். கர்நாடக அரசு, பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் உள்ளதா என பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து வருகிறது. அதே போல கேரள அரசும் எத்தனால் அளவை சரிபார்க்க மாதிரிகளை சேகரித்து வருகிறது
எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் எந்த வாகனங்களும் பழுதடைந்ததாக, இது வரை பதிவு செய்யப்பட்ட புகார்கள் கிடைக்கவில்லை. மேலும் மாநில அரசு எத் தனால் அளவை பரிசோதிப்பதை வரவேற்கிறேன். இதில் அளவுக்கு அதிகமாக எத்தனால் கலந்து இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும். மேலும் மத்திய அரசு பல்வேறு ஆய்வுகளை நடத்திய பின்னர் தான், எத்தனால் 20 சதவீதம் கலந்த பெட் ரோலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாகனங்களுக்கு பழுது ஏற்படாது
கேரள அரசு மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க விரும்பினால், எண்ணெய் சுத்திக ரிப்பு ஆலைகளில் இருந்து எடுத்து ஆய்வு செய்யலாம். இதில் மிக சரியான முடிவு கிடைக்கும். ஆனால், சிலர் கேன்களில் எடுத்து வந்து பரிசோதிக்கும் போது, அவர்கள் பெட்ரோலில் கலப்படம் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, அத்தகைய ஆய்வறிக்கைகள் நம்பத்தக்கது அல்ல. அதனால் தான் கர்நாடகா வில் பெட்ரோலில் 28 சதவீதம் எத்தனால் கலந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே, உண்மையை அறிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து மாதிரி எடுத்து பரிசோதிக்க வேண்டும். எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து யாருக்கும், எந்த சந்தேகமும் வேண்டாம். அதனை பயன்படுத்துவதால் வாகனங் களுக்கு எந்த பழுதும் ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here