பெந்தோங், மார்ச் 20 :
அனுமதி இல்லாமல் வனப்பகுதியில் நுழைந்து, Nuang Mount Nuang மலையேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 17 பேரை, பெந்தோங் மாவட்ட வன அலுவலகத்தின் (PhD) அமலாக்க உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டனர்.
இதில் 25 மற்றும் 52 வயதிற்குட்பட்ட 5 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவர் என்று பெந்தோங் மாவட்ட வன அதிகாரி, முஹமட் அஸ்மான் யஹ்யா தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட இந்த குழுவானது சிலாங்கூர் நகரத்திலிருந்து வந்ததாகவும் உள்ளூர் மலை ஏறுபவர்கள் மத்தியில் புகழ்பெற்ற மவுன்ட் நுனியில் ஏற வேண்டும் என்ற நோக்கில் வந்ததாகவும் ஆரம்ப விசாரணையில் அறிய முடிந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சிலாங்கூர் மாநில வனப்பகுதித் திணைக்களத்தில் (JPNS) வனப்பகுதிகளில் நுழைவதற்கான அனுமதியை வைத்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் சிலர் அனுமதி எடுக்க வேண்டும் என்று தமக்கு தெரியாது என்றும் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
இருப்பினும் கைது செய்யப்பட்ட அனைவரும் இதுவே முதல் முறையாக Mount Nuang மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
“இந்தக் குழு கைது செய்யப்பட்டு, போலீஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைமையகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் இன்று கூறினார்.
தேசிய வனப்பகுதியின் (APN) 1984 ஆம் ஆண்டின் பிரிவு 47 (1) பிரிவின் கீழ், அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவது சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் குற்றம் நிரூபிக்கப்படடால் RM10,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று முஹமட் அஸ்மான் தெரிவித்தார்.















