ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் ரிலையன்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் : ஆண்டு பொதுக்குழுவில் முகேஷ் அம்பானி உரை

மும்பை: இந்திய பொருளாதார மதிப்பு 2030-ம் ஆண்டில் 10 லட்சம் கோடி டாலராக உயரும் என்று முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது பொதுக்குழு இன்று நடைபெற்றது.

இதில் பேசிய முகேஷ் அம்பானி ஜியோ செல்பேசி நிறுவனத்தின் சந்ததாரர் எண்ணிக்கை 34 கோடியாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த 12 மாதங்களுக்கு ஜியோ கண்ணாடி இழை தொலை தொடர்பு பணிகள் நிறைவடையும் என்றும், ஒவ்வொரு மாதமும் ஜியோவில் 10 லட்சம் பேர் இணைந்து வருவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K Tv மற்றும் செட் ஆப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஜியோ பைபர் மூலம் திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியாகும் அதே நேரம் வீட்டில் இருந்தே அந்த படத்தை பார்க்க முடியும் என்றும், இந்த திட்டம் 2020 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகவும், இது எந்த ஒரு இந்திய நிறுவனமும் இலக்காகும் என்று தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பகுதி வளர்ச்சியில் ரிலையன்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் தொடர்பாக சிறப்பு திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ரிலையன்ஸ் பவுண்டேஷன் மூலமாக பலன் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முகேஷ் அம்பானி 42-வது பொதுக்குழுவில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here