இஸ்கண்டார் புத்ரியில் கார் திருட்டு – 39 பேர் கைது

இஸ்கண்டார் புத்ரி, ஆக. 15 – ஜனவரியில் இருந்து இஸ்கண்டார் புத்ரியில் கார் திருடும் கும்பலைச் சேர்ந்த 39 பேர் கைது செய்யப்பட்டு 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை ஓசிபிடி இப்ராஹிம் மாட் சோம் தெரிவித்தார்.

கார் திருட்டைத் தடுக்க ஓப்ஸ் லெஜாங் சோதனை நடவடிக்கை நடத்தப்படு வருவதாகத் தெரிவித்தார்.

13லிருந்து 45 வயதுடைய 3 அந்நிய நாட்டவர் உட்பட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 15 பேர் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும்
இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்தச் சோதனை நடவடிக்கையில் 288,000 ரிங்கிட் பெறுமான 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here