ஸாக்கிர் மீது குற்றம்சாட்ட போதுமான ஆதாரங்கள் உள்ள – வழக்கறிஞர் தரப்பு

பெட்டாலிங் ஜெயா

இதற்கிடையில், நாட்டின் அமைதித் தன்மையை சீர்குலைத்ததற்கும் இனவாதமான சொற்பொழிவை வழங்கியதற்கு ஸாக்கிர் நாய்க் மீது குற்றம்சாட்ட போதுமான ஆதாரங்கள் உள்ளன என வழக்கறிஞர் தரப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தண்டனைச் சட்டத்தின் கீழ் ஸாக்கிர் மீது குற்றம் சாட்ட மலேசியாவில் நிறைய சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் மீது குற்றம்சாட்டப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை என வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஹரிஸ் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் உடனே தீர்க்கப்பட வேண்டும். நமது இந்தியர் மற்றும் சீன சகோதரர்கள் பற்றி அவர் பேசியது ஏற்றுக் கொள்ள முடியாது. வேறு நாட்டைச் சேர்ந்தவர் நம் நாட்டு சகோதரர்கள் பற்றி இழிவாகப் பேசுவது மிகப் பெரிய குற்றம் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here