ஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை

ஈப்போ

ஈப்போ கம்போங் டூசுன் பெர்த்தாம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் புகுந்த இந்தோனேசிய ஆடவன் ஒருவன் அந்த ஆலயத்தின் சிலைகளை உடைத்து சேதபடுத்தியுள்ளான்.

இன்று அதிகாலை  1.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கையில் ஸ்பேனருடன் ஆலயத்தினுல் நுழைந்த அந்த ஆடவன் நவகிரக சிலைகள் உடபட ஆலய பிரகாரத்தில் உள்ள சிலைகள் என மொத்தம் 15 சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளான் என ஆலயத் தலைவர் தன்பாலன் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தினால் ஆலயத்திற்கு 80 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.

ஆலய நிர்வாகத்தினரால் போலீஸ் புகார் வழங்கப்பட்டதை அடுத்து அதிகாலை சுமார் 4.15 மணியளவில் சுற்று வட்டார மக்களின் உதவியோடு போலிசார் அந்த ஆடவனை கைது செய்தனர் என பேராக் மாநில போலிஸ் படைத் துணைத் தலைவர் லிம் ஹோங் ஷுஅன் தெர்வித்துள்ளார். மேலும், கைதுசெய்யப்பட்ட அந்த இந்தோனேசிய ஆடவன் மனநிலை பாதிக்கப்பட்டவ்ன் போல இருப்பதாகவும், அவன மருத்துவமனைக்கு மனநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவான் எனவும் அவர் கூறினார்.

இச்செயலை அவன் எந்த நோக்கத்திற்காக செய்தான் என்பது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் எந்த ஒரு முடிவிற்கும் அல்லது கணிப்பிற்கும் வர வேண்டாம் என லிம் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியம் உட்பட இன்னும் சில அரசியல் பிரமுகர்களும்  சம்பவ இடத்திற்கு விரைந்து நிலவரத்தை கண்டறிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here