புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை!

திருவனந்தபுரம்
சினிமா பிரபலங்களுக்கென ஜாலியான வாழ்க்கை , காசு பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று நம்மில் சிலர் கற்பனையில் பேசி கொண்டும் நினைத்து கொண்டும் இருக்கிறோம். ஆனால் அவர்களும் நம்மைப்போல பல பிரச்சனைகளில் பொருளாதார சிக்கலில் இருப்பவர்களும் உண்டு. அந்த நிலையிலும் உதவி செய்கிறார்கள் என்றால் ஆச்சரியமே!

கேரளாவைச் சேர்ந்த சீரியல் நடிகை சரண்யா கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அறுவை சிகிச்சைக்கும் தயாராகிவிட்டார். இந்நிலையில் கேரளாவில் அண்மையில் வந்த வெள்ளத்தால் மக்கள் பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு பணம், பொருள், உதவி எனவே பரவலாக செய்து வருகின்றனர். அதில் நடிகை சரண்யா தனது அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வெள்ள நிதிக்காக வழங்கி உள்ளார். அதே வேளையில் அவர் தற்போது ஏழாவது முறையாக அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here