லாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி!

சென்னை

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த பிரச்சனைகளை பார்த்து, ரசிகர்களே ஆட்டம் கண்டு விட்டனர். குறிப்பாக இத்தனை நாள் ஒன்னும் தெரியாத பொண்ணு மாதிரி இருந்த, லாஸ்லியா ஆண்களுக்கு சப்போர்ட் செய்து வரிந்து கட்டி கொண்டு வந்து சண்டை போட்ட காட்சியும், கதியத்தையும் பார்த்து மிரண்டு விட்டனர் ரசிகர்கள்.

லாஸ்லியா உண்மையில் இந்த மாதிரி சண்டை போடுவாரா என லாஸ்லியாவின் ஆர்மியை சேர்ந்தவர்களே அதிர்ந்து போய் விட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

இந்த சண்டை வர காரணமாக இருந்தவர் என்றால், அது வனிதா என்றே சொல்லலாம். இவரை தொடர்ந்து, மது பெண்களை, ஆண்கள் பயன் படுத்தி கொள்கிறார்கள் என கூறியதால் பிரச்சனை பெரிதாக வெடித்தது.  உண்மையில் தவறு செய்த, முகேன், மற்றும் கவினை, சாண்டி, லாஸ்லியா, உள்ளிட்டோர் ஆதரித்து வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன், கவின் தன்னை ஏமாற்றினார் என அழுது விட்டு தற்போது அவருடைய கையை பிடித்து கொண்டே சுற்றுகிறார் லாஸ்லியா அதே நேரத்தில், மது பெண்கள் மீதும் தவறு உள்ளது என கூறியும். இந்த விஷயம் பற்றி பேச வேண்டாம் என நினைக்கிறார்கள் ஒட்டு மொத்த ஆண்கள்.
நேற்றைய தினம் சந்தை கடை போல் மாறி, ஆண்கள் மற்றும் பெண்கள் கத்தி சண்டை போட்டனர். ஒட்டு மொத்தத்தில், பெண்களுக்காக பேச போய் மூக்கு உடைத்து போனது என்னவோ மதுக்கு தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here