மகாதீரை பதவி விலகச் சொல்வதா? அஸ்மின் காட்டம்

கோலாலம்பூர்

துன் மகாதீர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ள பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீமை கடுமையாகச் சாடியுள்ளார் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி.

ஹசான் இதில் தலையிடுவதைத் தவிர்த்து தமது தொகுதியின் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மகாதீர் பிரதமர் பதவியில் இருப்பது மக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று.
இந்த விவகாரத்தில் பக்காத்தானின் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கிறது.

நாட்டின் நிலைத்தன்மையை ஒரு நிலைப்படுத்தவும் முதலீட்டாளர் களைக் கவர்ந்திழுத்து நாட்டை வளப்படுத்தும் நோக்கில்தான் பிரதமர் பதவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரால் முடியும் என நம்பியதால் அப்படி செய்யப்பட்டதாக டத்தாரான் மெர்டேக்காவில் உலக புள்ளிவிவர காங்கிரஸின் 5 கிலோ மீட்டர் ஓட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது அஸ்மின் அதனைத் தெரிவித்தார்.

டாக்டர் மகாதீர் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் செயலற்று இருப்பதால், அவர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டுமேன ஹசான் அறைகூவல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here