கெண்டாரி
ஃபெரி வெடித்து தீப்பிடித்ததில் இரு குழந்தைகள் உட்பட எழுவர் மரணமடைந்த நிலையில், நால்வரை காணவில்லை. இச்சம்பவம் சுலவேசி தீவில் நிகழ்ந்துள்ளது.
தென்கிழக்கு சுலவேசிலிருந்து மத்திய சுலவேசியில் உள்ள ஒரு தீவுக்கு பயணித்த அந்த ஃபெரியின் டீசல் தொட்டி வெடித்து தீப்பிடித்ததால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
61 பேர் அங்குள்ள மக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், இரு குழந்தைகள்(2 வயது & 4 வயது) உட்பட எழுவர் பலியானர். இன்னும் நால்வரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது