அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி,தமிழக அரசு எந்த முன் அறிவிப்பின்றி பால் விலையை உயர்த்தியுள்ளது. இது பொது மக்களை பெரிதும் பாதிக்கும். மேட்டூர் அணை நிரம்பி கல்லணைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. ஆனால் கடைமடை பகுதிகளில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்கள் இன்னும் தூர் வாரப்படாமல் இருக்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அந்த தொகை என்ன ஆனது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பெரும்பான்மை பலம் இருப்பதால் மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று செய்யும் செயல்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்றார்.