சென்னை
சென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை, கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஆர்.டி.சேகர், ப.தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் திமுக மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் என மொத்தம் 474 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1-ம் தேதி இளைஞர் அணி சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடந்த முடிவு.
* தமிழகத்தில் தபால் மற்றும் ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* தமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
* தேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப்பெற வேண்டும்.
* 3 மாதங்களுக்கு ஒரு முறை திமுக இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு பின்னர், மாநில மாநாடு நடத்தப்படும்.
* 18 முதல் 35 வரை உள்ளவர்கள் திமுக இளைஞரணியில் சேரலாம் என வயது வரம்பு மாற்றம்.
* திமுக இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயம்.
* செப்.14 முதல் நவ.14-க்குள் 30 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு, என்றும் பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மாலை 4 மணிவரை நடக்கும் கூட்டத்தில் இளைஞரணியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.