கோல திரெங்கானு
பிகேஆரில் பிரிவினையோ அல்லது இரு அணிகளோ இல்லையென கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கூட்டத்தில் அஸ்மின் அலியும் சில தலைவர்களும் கலந்து கொள்ளாதது குறித்து கேட்டபோது, அஸ்மின் அலுவல் காரணமாக வர இயலவில்லை என்றும் காரணங்களைத் தம்மிடம் விளக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது கட்சியின் நடவடிக்கைகள் தொய்வில்லாமல் நடப்பதே முக்கியம் என்றும் கட்சி உறுப்பினர்கள் அதன் நோக்கங்கள் நிறைவேற தகுந்த ஒத்துழைப்பைத் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.