கோலாலம்பூர்
போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவன் கைது செய்யப்பட்டு இருவர் தப்பி ஓடினர்.
ஆகஸ்டு 23ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஜாலான் கெந்திங் கிள்ளான் அடுக்குமாடி வீட்டில் இரு குற்றவாளிகளிகளைத் தேடிச் சென்ற போலீசார், ஒருவனைக் கைது செய்த வேளையில், இருவர் தப்பி ஓடினர்.
மூன்று கொள்ளையர்கள் காரொன்றில் நுழைய முற்பட்டபோது, போலீசார் அவர்களை அணுகினர். அவர்களில் ஒருவன் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இன்னொரு சூட்டை அடுக்குமாடிக் கட்டடத்தின் முகப்பை நோக்கிச் சுட்டதாக மாநகர் போலீஸ் தலைவர் மஸ்லான் லாஸிம் தெரிவித்தார்
போலீசார் அவர்களை எதிர்த்துச் சுட்டபோது, ஒருவனுக்குக் காலில் துப்பாக்குச் சூடு பாய்ந்தது. காயமடைந்த அவன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 35 குண்டுகள் கொண்ட கைத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
தப்பி ஓடிய கொள்ளையர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.








