கோலாலம்பூர்
சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கின் விவகாரத்தை பாஸ் கட்சி கையாளும் விதத்தின் மீது அதிருப்தி கொண்டிருப் பதாக மஇகாவின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் ஸாக்கிர் இனவாதத்தைத் தூண்ட வேண்டாமென அக்கட்சி அவருக்கு அறிவிறுத்தி இருக்க வேண்டும்.
அம்னோ, பாஸ் கட்சிகளோடு மஇகா ஒந்துழைத்தாலும், ஸாக்கிரின் விவகாரத்தில் மஇகாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென விக்னேஸ்வரன் கட்சியின் 73ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றறும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும், மலேசியாவில் ஸாக்கிர் இருப்பதில் மஇகாவுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், அவர் இன பிரச்சினைகளைத் தொட்டுப் பேசாதிருப்பதே நல்லது என அவர் வலியுறுத்தினார்.
அவர் தமது இனவாதப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டாலும், இனி அவ்வாறாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரின் நிரந்தர குடியிருப்பு சம்பந்தமான முடிவை அரசிடமே விட்டு விடுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஜாவி-அரேபிய சித்திர எழுத்து அமலாக்கத்தை மஇகா எதிர்க்கவில்லை என்றும் அதனை அமலாக்க காலம் கனிந்து வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த விவகாரத்தில் முந்தைய தேசிய முன்னணி அரசை பக்காத்தான் அரசு குறை கூறுவதை விடுத்து, அமைச்சரவைக் கூட்டத்திலேயே முடிவெடுக்க முடியும்.
இதனிடையே, பேராளர் கூட்டத்தில் பலவேறு விவகாரங்கள் குறிந்து விவாதம் நடத்தப்படும் என்றும் முக்கியமாக 16 வயதானவர்களைக் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்க்கும் தீர்மானம் முக்கியமாக விவாதிக்கப்படும்.
மேலும், ஸாக்கிர் விவகாரம், ஒரு தலைப்பட்சமான மத மாற்றம், மித்ராவின் நிதி விநியோகம், இந்தியர்களிடையே இருக்கும் ஆவணமில்லா பிரச்சினை போன்றவையும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.