கோலாலம்பூர்
உள்கட்சி மற்றும் உறுப்புக் கட்சிகளிடையே எழுந்துள்ள பதவிப் போட்டியானது பக்காத்தான் கூட்டணியை சிதற வைத்து அதனை முடிவுக்குக் கொண்டு வரும் என அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
மஇகாவின் 73ஆம் ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய ஸாஹிட் ஹமிடி, பக்காத்தானின் உட்கட்சி போராட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே என்றும் மக்கள் பக்காத்தானின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அது சொந்தத் திட்டம் எதுவும் இல்லாமல், தேசிய முன்னணி யின் திட்டங்களைப் பெயர் மாற்றி, அமல் படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
கடந்தாண்டு மே மாதம் முதல் 1,691 அரசின் குத்தகைத் தொழிலாளர்களும் தனியார் துறையின் 32,928 பேர் வேலை இழந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அம்னோவுடன் இணைந்து செயலாற்றும் மஇகாவுக்கு ஸாஹிட் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் கரை சேராது என்றும் குறிப்பிட்டார்.