அஸ்மின் அலியின் மீண்டும் சில வீடியோக்கள் நான் சம்பந்தப்படவில்லை அன்வார்.

பெட்டாலிங் ஜெயா

பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டுள்ளார் எனக் கூறி அண்மையில் வெளியாகிய ஓரினப் புணர்ச்சி வீடியோ விவகாரம் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அது தொடர்பான மேலும் 6 வீடியோக்கள் இன்று வாட்ஸ் ஆப் குழுமங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த 6 வீடியோக்களும் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த வீடியோக்களின் தொடர்ச்சியாகும். அந்த வாட்ஸ் ஆப் குழுவில் பல அரசியல் தலைவர்கள் இணைக்கப்பட்டு இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் உங்களுக்கும் அஸ்மின் அலிக்கும் இடையில் உள்ள மோதலினால் இதில் ஈடுபட்டுள்ளீர்களா என பரவி வரும் ஆருடம் குறித்து கருத்து தெரிவித்த பி.கே.ஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், “ இவ்விவகாரத்தில் நான் சம்பந்தப்படவில்லை; சம்பந்தப்படவும் விருப்பமில்லை” என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும், அஸ்மின் மீது கட்சி சார்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுமா எனும் கேள்விக்கு “ நான் அந்த வீடியோக்களைப் பார்க்கவில்லை; இவ்விவகாரத்தை நான் போலிஸிடம் விட்டு விடுகிறேன்” என அன்வார் கூறினார்.

இதற்கிடையில், தன்னுடைய அரசியல் வாழ்க்கையை சீர்குலைக்க வெளியாக்கப்பட்ட வீடியோக்கள் இவை என அஸ்மின் அலி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here