திருப்பூர்
பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்து கொண்டுள்ளோம் என திருப்பூர் நிர்வாகி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர் எனவும் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்தது என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். முதலீட்டாளர்கள் தமிழகம் வந்தால் திமுகவுக்கு மகிழ்ச்சிதான் எனவும் கூறினார்.