வாக்காளர் சேர்ப்புப் பணி அமமுகவினருக்கு டிடிவி.தினகரன் வேண்டுகோள்

சென்னை

அமமுகவினர் தங்களை வாக்காளர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று டிடிவி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் அமமுகவினர் தங்களை முழுமையாக  ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர்  பட்டியலை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் சரிபார்த்தல் திட்டத்தை வரும் 30ம் தேதி வரை செயல்படுத்த உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை சரியாகவும், அக்கறையோடும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அமமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் திருத்தப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்  கொள்ள வேண்டும். தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதில் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். மிக முக்கியமான இந்த பணியை, அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட  செயலாளர்கள் முழு வீச்சில் ஒருங்கிணைக்க  வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here